கிரிக்கெட்

ஷேன் பாண்டுக்கு பும்ரா புகழாரம் ‘பந்து வீச்சின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்’ + "||" + Bumra praise for Shane Bond In the progression of the ball range Plays an important role

ஷேன் பாண்டுக்கு பும்ரா புகழாரம் ‘பந்து வீச்சின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்’

ஷேன் பாண்டுக்கு பும்ரா புகழாரம் ‘பந்து வீச்சின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்’
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.
மும்பை, 

மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் செயல்படுகிறார். அவருக்கு புகழாரம் சூட்டி பும்ரா நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘நான் இங்கு (மும்பை அணி) இல்லாமல் இந்திய அணிக்காக ஆடும் போது கூட ஷேன் பாண்டுடன் பேச எப்போதும் முயற்சிப்பேன். அவருடனான எனது பயணம் அருமையானது. ஒவ்வொரு ஆண்டும் அவரிடம் இருந்து புதுமையான ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு, எனது பந்து வீச்சில் அதை சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். எனது பந்துவீச்சின் வளர்ச்சியிலும், நல்ல நிலையில் இருப்பதிலும் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதுவரை அவருடன் நல்ல நட்புறவு அமைந்துள்ளது. மேலும் பல ஆண்டுகள் இது நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.