டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் இல்லையா? புவனேஷ்வர்குமார் மறுப்பு


டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் இல்லையா? புவனேஷ்வர்குமார் மறுப்பு
x
தினத்தந்தி 15 May 2021 11:38 PM GMT (Updated: 2021-05-16T05:08:42+05:30)

புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதன் பிறகு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் இல்லை என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதை அவர் மறுத்துள்ளார். புவனேஷ்வர்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறனோ இல்லையோ? எப்போதும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) விளையாடுவதற்கு தான் என்னை தயார்படுத்துகிறேன். அதை தொடர்ந்து செய்வேன். யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.


Next Story