கொரோனாவுக்கு அச்சப்படுங்கள்... சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்


கொரோனாவுக்கு அச்சப்படுங்கள்... சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்
x
தினத்தந்தி 16 May 2021 1:56 PM GMT (Updated: 16 May 2021 1:56 PM GMT)

கொரோனாவால் 4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேர் பாதித்த நிலையில், கொரோனாவுக்கு அச்சப்படுங்கள் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகினார்.

இதன்பின்னர் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஐ.பி.எல். போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.  இந்நிலையில், ஒரே வாரத்தில் 6 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகளுக்கு அஸ்வினின் குடும்பத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை அஸ்வினின் மனைவி பிரீத்தி தனது டுவிட்டரில் கடந்த 1ந்தேதி உறுதிப்படுத்தினார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து உள்ள சூழலில் அஸ்வின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அச்சமூட்டும் வகையில் உள்ளது.  அச்சம் ஏற்படுத்த கூடிய விசயங்களை பரப்ப வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு நான் கூறி கொள்வது...

தயவு செய்து அச்சப்படுங்கள்.  அதிகம் அச்சப்படுங்கள்.  இதற்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழி இதுவே.  இந்த வைரசுக்கு எதிராக பாதுகாத்து கொள்ள போர்க்கால அடிப்படையில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

முக கவசம் அணியுங்கள்.  தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு நாளும் சோதனையாக உள்ளது என பதிவிட்டுள்ள அவர், ரேசன் கடை ஒன்றில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூடியிருந்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, அச்சம் ஒன்றே இந்த சூழ்நிலையை மாற்ற கூடிய ஒரே விசயம் என்றால், அச்சம் இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story