கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது + "||" + Indian women's cricket team leaves for Australia

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது.
புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சென்று ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இந்திய அணி செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருக்கிறது. செப்டம்பர் மாதத்தின் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மோத இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் தெரிவித்தார். 

இந்த பயணத்துக்கான அட்டவணையில் 3 ஒரு நாள் போட்டிகளும், மூன்று 20 ஓவர் ஆட்டங்களும் இடம் பெறும் என்று தெரிகிறது. போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடர் முதலில் கடந்த ஜனவரி மாதத்தில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தால் அப்போது தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.