கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்ற மைக் ஹஸ்சி ஆஸ்திரேலியா புறப்பட்டார்


கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்ற மைக் ஹஸ்சி ஆஸ்திரேலியா புறப்பட்டார்
x
தினத்தந்தி 16 May 2021 10:05 PM GMT (Updated: 16 May 2021 10:05 PM GMT)

கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்ற மைக் ஹஸ்சி ஆஸ்திரேலியா புறப்பட்டார்.

சென்னை, 

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலால் பாதியில் தள்ளிவைக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் சிக்கியதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தார். சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பாதிப்பில் இருந்து மீண்டார். சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியது. இந்த நிலையில் மைக் ஹஸ்சி நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து தோகா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்.

இதே போல் ஐ.பி.எல்.-ல் பங்கேற்ற ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள், வர்ணனையாளர்கள், அதிகாரிகள் என்று 38 ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருந்து கிளம்பி மாலத்தீவில் தங்கியிருந்தனர். அவர்கள் அங்கிருந்து தனிவிமானத்தில் புறப்பட்டு இன்று ஆஸ்திரேலியாவை சென்றடைகிறார்கள். தாயகம் திரும்பியதும் சிட்னியில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Next Story