கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து மோதிய சென்னை டெஸ்டில் சூதாட்டம் நடக்கவில்லை; ஐ.சி.சி. விசாரணையில் தகவல் + "||" + India's Test matches against England, Australia were not fixed: ICC

இந்தியா-இங்கிலாந்து மோதிய சென்னை டெஸ்டில் சூதாட்டம் நடக்கவில்லை; ஐ.சி.சி. விசாரணையில் தகவல்

இந்தியா-இங்கிலாந்து மோதிய சென்னை டெஸ்டில் சூதாட்டம் நடக்கவில்லை; ஐ.சி.சி. விசாரணையில் தகவல்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடைபெறுவதாகவும், 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி மற்றும் 2017-ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியின் ஆட்ட போக்கை பார்த்தால் அதில் சூதாட்டம் நடந்து இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அல் ஜசீரா என்ற டெலிவிஷன் கடந்த 2018-ம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சூதாட்ட தரகர் ஒருவரும் கிரிக்கெட்டில் சூதாட்டம் எந்த மாதிரி நடக்கிறது என்பது தனக்கு தெரியும் என்று குற்றம் சாட்டினார்.

இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்தியது. இதற்காக 4 தனிப்பட்ட பெட்டிங் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் இந்திய அணி மோதிய அந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சூதாட்டம் நடந்ததற்கான எந்தவித முகாந்திரமும், நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் இந்த விஷயத்தில் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அந்த டெலிவிஷனின் சூதாட்ட குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.