கிரிக்கெட்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் விருத்திமான் சஹா + "||" + Wriddhiman Saha returned home after recovering from corona

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் விருத்திமான் சஹா

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் விருத்திமான் சஹா
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார்.
புதுடெல்லி,

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரானது, வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார்.

இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சை முடிந்து விருத்திமான் சஹா வீடு திரும்பியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் விருத்திமான் சஹா வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை;கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறப்பு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2. சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மேற்கு வங்கத்தில் இன்று 6,980 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 1,10,183 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.98 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.81 கோடியை தாண்டியது.