கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து வெற்றி பெறும் - மைக்கேல் வாகன் ஆரூடம் + "||" + New Zealand wins Test Championship with Michael Vaughan

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து வெற்றி பெறும் - மைக்கேல் வாகன் ஆரூடம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து வெற்றி பெறும் - மைக்கேல் வாகன் ஆரூடம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து வெற்றி பெறும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆரூடம் கணித்துள்ளார்.
லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் சவுத்தம்டனில் அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மோத உள்ளன. இந்த போட்டியில் வாகை சூடுவது யார் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். அவர் கூறுகையில்,

 ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெறும். இங்கிலாந்து சீதோஷ்ண நிலை, டியூக் வகை பந்து, நெருக்கடியான போட்டி அட்டவணை, அது மட்டுமின்றி தனிமைப்படுத்துதல் முடிந்து ஒரு வாரத்துக்கு முன்பாகத் தான் போட்டிக்கு தயாராவது இவை எல்லாம் இந்தியாவுக்கு கொஞ்சம் பாதகமான அம்சமாகும். ஆனால் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 2 ெடஸ்டுகளில் ஆடுகிறது. அது ெடஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தயாராவதற்கு நல்ல பயிற்சியாக அமையும். எனவே இந்தியாவை விட நியூசிலாந்து தான் சிறப்பாக தயாராகி இருக்கும். மேலும் இங்கிலாந்தில் டியூக் பந்தில் விளையாடிய அனுபவம் நியூசிலாந்து வீரர்களுக்ேக அதிகம். அதனால் தான் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று சொல்கிறேன்’ என்றார்.