கிரிக்கெட்

‘பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கை தரும் ரோகித் சர்மா’ - முகமது ஷமி புகழாரம் + "||" + ‘Rohit Sharma gives hope to bowlers’ - Mohammad Shami praise

‘பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கை தரும் ரோகித் சர்மா’ - முகமது ஷமி புகழாரம்

‘பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கை தரும் ரோகித் சர்மா’ - முகமது ஷமி புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
மும்பை,

ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றிய ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். களத்தில் ஒரு பந்து வீச்சாளராக அவரிடம் அறிவுரை கேட்டால், எப்போதுமே நம்பிக்கையான, நேர்மறையான பதில் தருவார். அது மட்டுமின்றி எதிரணி பேட்ஸ்மேன் எப்படிப்பட்டவர், எப்படி ஆடுகிறார் என்பதை விட பந்து வீச்சாளர் மனதில் என்ன திட்டம் உள்ளது என்பதை வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்துவார். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இத்தகைய நம்பிக்கை கொடுப்பது மிகவும் முக்கியம். ரோகித் சர்மா வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர். பேட்டிங் செய்வதை தவிர்த்து மற்றபடி களத்தில் பதற்றமின்றி அமைதியுடன் இருப்பார். ஆனால் விராட் கோலி அப்படி இல்லை. பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். அவர்களுக்கு நிகராக ஆக்ரோஷம் காட்டும் ஒரு வீரர் யார் என்றால் அனேகமாக அது எங்களது கேப்டன் கோலி தான். சில சமயம் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகுவதை பார்த்து, விக்கெட் வீழ்த்தியது நானா அல்லது நீங்களா என்று வேடிக்கையாக அவரிடம் கேட்பது உண்டு. பந்து வீச்சாளர்களை விட அவர் அதிகமாக கொண்டாடுவார். இதே ஆக்ரோஷத்தை பேட்டிங்கிலும் காட்டுவார்.

இவ்வாறு ஷமி கூறினார்.