ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி அட்டவணை அறிவிப்பு


ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி அட்டவணை அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 11:02 PM GMT (Updated: 2021-05-20T04:32:36+05:30)

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி அட்டவணை நேற்று வெளியிட்டது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உள்ளூர் வருங்கால (2021-2022) போட்டி அட்டவணையை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஹோபர்ட்டில் வருகிற நவம்பர் 27-ந் தேதி தொடங்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானை முதல்முறையாக சந்திக்கிறது. இதன் பின்னர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலும் (டிசம்பர் 8-12), 2-வது டெஸ்ட் (பகல்-இரவு) அடிலெய்டிலும் (டிசம்பர் 16-20), 3-வது டெஸ்ட் மெல்போர்னிலும் (டிசம்பர் 26-30), 4-வது டெஸ்ட் சிட்னியிலும் (ஜனவரி 5-9), 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெர்த்திலும் (ஜனவரி 14-18) நடைபெறுகிறது. வழக்கமாக ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறும். ஆனால் அதற்குமாறாக இந்த முறை அங்கு 4-வது டெஸ்ட் நடத்தப்படுகிறது. இவ்விரு அணிகள் இடையே கடைசியாக 2019-ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடர் டிராவில் (2-2) முடிந்து இருந்தது நினைவிருக்கலாம்.

Next Story