கிரிக்கெட்

இந்திய அணியில் கூடுதலாக விக்கெட் கீப்பர் பரத் சேர்ப்பு + "||" + In addition to the Indian team wicketkeeper Bharath

இந்திய அணியில் கூடுதலாக விக்கெட் கீப்பர் பரத் சேர்ப்பு

இந்திய அணியில் கூடுதலாக விக்கெட் கீப்பர் பரத் சேர்ப்பு
இ்ந்திய அணியில் கூடுதலாக ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மும்பை, 

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக ‘இளம்புயல்’ ரிஷாப் பண்டும், மூத்த வீரர் விருத்திமான் சஹாவும் இடம் பிடித்துள்ளனர். இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியின் போது கொரோனா பாதிப்பில் சிக்கிய சஹா சமீபத்தில் தான் அதில் இருந்து மீண்டார். ஆனாலும் போட்டிக்குள் அவர் முழு ஆற்றலுடன் உடல்தகுதியை எட்டிவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இ்ந்திய அணியில் கூடுதலாக ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய ஏ அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்படும் கே.எஸ்.பரத் மும்பையில் உள்ள ஓட்டலில் இந்திய டெஸ்ட் அணியை தனிமைப்படுத்தும் பாதுகாப்பு வளையத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.