கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் டிராவிட் + "||" + Dravid is the coach of the Indian cricket team for the Sri Lanka series

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் டிராவிட்

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் டிராவிட்
இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று தெரிகிறது.
புதுடெல்லி,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதன் பின்னர் இந்திய அணி அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் (ஜூலை 13, 16, 19) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் (ஜூலை 22, 24, 27) விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்தார். இந்த சமயத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதால் இந்திய இரண்டாம் தர அணி இலங்கை தொடருக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்த அவர் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதே போல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பயிற்சி குழுவினர் அப்போது இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடருக்கு யார் பயிற்சியாளராக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்தது.

இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளை திறம்பட வழிநடத்தி இருக்கும் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. தற்போது இதற்கு டிராவிட் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செல்ல எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கிறது. இளம் வீரர்களை டிராவிட் ஏற்கனவே நன்றாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இதனால் இலங்கை பயணம் மேற்கொள்ளும் இளம் இந்திய அணிக்கு அவரால் சிறப்பாக பயிற்சி அளிக்க முடியும்’ என்றார். இலங்கை தொடருக்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.