கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம் + "||" + India Pacer Bhuvneshwar Kumar's Father Dies Of Cancer At 63

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம்
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
மீரட்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.  கிரண் பால் சிங் உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றியவர். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கிரண் பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்த கிரண் பால் சிங், உடல் நிலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மோசமானது. இதையடுத்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் கிரண் பால் சிங் அனுமதிக்கப்பட்டார்.  எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கிரண் பால் சிங் உயிரிழந்தார்.   புவனேஷ்குமாரின் தந்தை மறைவுக்கு சக வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியா முதலில் பந்து வீச்சு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.