கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க விரும்பும் சாதனை எது? வாஷிங்டன் சுந்தர் ருசிகர பதில் + "||" + Which record do you want to create in international cricket? Washington Sunder Delicious Answer

சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க விரும்பும் சாதனை எது? வாஷிங்டன் சுந்தர் ருசிகர பதில்

சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க விரும்பும் சாதனை எது? வாஷிங்டன் சுந்தர் ருசிகர பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலியின் நம்பிக்கைக்குரிய பவுலராக மாறி விட்டதால் அவரை ‘பவர்-பிளே’யில் அதிகமாக பயன்படுத்துவதை கோலி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சென்னை,

இந்திய அணிக்காக 4 டெஸ்ட், ஒரு நாள் போட்டி ஒன்று, 31 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கும் 21 வயதான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளார். அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டியை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: உங்களது சகோதரி ஷைலஜாவும் கிரிக்கெட் வீராங்கனை தான். உங்களில் பேட்டிங்கில் சிறந்தவர் யார்?

பதில்: நிச்சயம் நான் தான்.

கேள்வி: சிறுவயதில் உங்களது கிரிக்கெட் முன்மாதிரி யார்?

பதில்: பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்). சிறு வயதில் அவரது பேட்டிங்கை அதிகமாக பார்த்து இருக்கிறேன். அதன்பிறகு டோனி (இந்தியா).

கேள்வி: எந்த சக கிரிக்கெட் வீரருக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தகவல்கள் பரிமாறுகிறீர்கள்?

பதில்: தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன்.

கேள்வி: வலை பயிற்சியின் போது விராட் கோலியை எத்தனை முறை அவுட் செய்திருப்பீர்கள்?

பதில்: கிரிக்கெட்டில் ‘கிங்’ கோலி. வலை பயிற்சியில் கூட அவரை வீழ்த்துவது எளிதல்ல. அனேகமாக ஒவ்வொரு வலைபயிற்சியின் இரண்டு பகுதியில் ஒரு முறை அவரை அவுட் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேள்வி: சென்னையில் கிரிக்கெட் விளையாடும் போது பயன்படுத்தும் வார்த்தைகளில் எதை பெங்களூரு அணி வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறீர்கள்?

பதில்: விடாதீங்க....

கேள்வி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், உங்களின் ரசிகை என்று கூறியிருக்கிறார். மற்ற விளையாட்டில் உங்களுக்கு பிடித்தமானவா் யார்?

பதில்: டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்). அவரின் நிறைய ஆட்டங்களை பார்த்து இருக்கிறேன். சில முறை அவரது ஆட்டங்கள் உந்துசக்தியாக இருந்திருக்கிறது.

கேள்வி: நீங்கள் இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளில் மறக்க முடியாத விக்கெட் எது?

பதில்: எனது முதலாவது ஐ.பி.எல். சீசனில் (2017-ம் ஆண்டு புனே அணிக்காக) இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரர்களான ரோகித் சர்மா, கீரன் பொல்லார்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தது மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான ஒன்று.

கேள்வி: உங்களுக்கு ஒரு அரிய சூப்பர் சக்தி கிடைக்கிறது என்றால்? அது எந்த மாதிரியான சக்தியாக இருக்க வேண்டும்?

பதில்: மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் மறையும் சக்தி வேண்டும். இதன் மூலம் எதிரணியின் ஓய்வறைக்குள் நுழைந்து அவர்களின் திட்டமிடல், யுக்திகளை அறிந்து கொள்ளலாம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் அறைக்குள் செல்ல விரும்புவேன்.

கேள்வி: உங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்வதற்குள் எந்தவிதமான ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்: ஒரே டெஸ்டில் சதம் அடித்து மற்றும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் (இதுவரை எந்த இந்தியரும் இச்சாதனையை செய்ததில்லை) வீழ்த்த வேண்டும்.

கேள்வி: கிரிக்கெட் வீரராக ஆகாமல் இருந்திருந்தால் இப்போது நீங்கள் என்னவாக இருந்திருப்பீர்கள்?

பதில்: இசை கலைஞராகியிருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.