கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + Asian Cup Cricket Tournament Postponed to 2023 - Official Announcement

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் நடக்க இருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி இந்த ஆண்டில் (2021) ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்த வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கைவிரித்து விட்டது.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்குரிய ஆசிய கோப்பை போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய அணிகளுக்கு இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் இந்தபோட்டியை நடத்த சாத்தியம் இல்லை. அதன் பிறகு 2022-ம் ஆண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இருப்பதால் 2021-ம் ஆண்டுக்குரிய ஆசிய போட்டியை 2023-ம் ஆண்டில் மட்டுமே நடத்த வாய்ப்பு இருப்பதாக ஆசிய கவுன்சில் கூறியுள்ளது.