கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது + "||" + Bangladesh vs Sri Lanka, 2nd ODI in Dhaka: Bangladesh register big win by 103 runs

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.1 ஓவர்களில் 246 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தனது 8-வது சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 125 ரன்கள் (127 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 38 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இலங்கை 40 ஓவர்களில் 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேற்கொண்டு 2 ஓவர்களையும் ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான நேரடி போட்டித் தொடர் ஒன்றை வங்காளதேச அணி வெல்வது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது
திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.
2. இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடக்கம்..!
இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3. 310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு
தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் இந்த ரத்தினத்திற்கு சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.
4. இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேலா ஜெயவர்த்தனே நியமனம்
மஹேலா ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.