கிரிக்கெட்

பகல்-இரவு டெஸ்ட்: ஸ்மிர்தி மந்தனா நெகிழ்ச்சி + "||" + I saw the men’s team playing the day and night test and didn’t expect me to experience it: Smriti Mandhana

பகல்-இரவு டெஸ்ட்: ஸ்மிர்தி மந்தனா நெகிழ்ச்சி

பகல்-இரவு டெஸ்ட்: ஸ்மிர்தி மந்தனா நெகிழ்ச்சி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்த ஆண்டு இறுதியில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் (பிங்க் பந்து டெஸ்ட்) அடியெடுத்து வைக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (செப்.30 முதல் அக்.3 வரை) பெர்த்தில் நடக்கிறது. இது குறித்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா நேற்று அளித்த பேட்டியில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் அணியின் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் போது, ஒரு நாள் நமக்கும் பகல்-இரவு டெஸ்டில் ஆடும் அனுபவம் கிடைக்கும் என்று நினைத்த கூட பார்த்ததில்லை. இப்போது இந்திய பெண்கள் அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடப்போகிறது. அதை நினைத்தாலே மனதுக்குள் பரவசமூட்டுகிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இது சிறப்பு வாய்ந்த தருணமாக இருக்கும்’ என்றார்.