கிரிக்கெட்

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: ராஜீவ் சுக்லா + "||" + IPL has been moved to UAE for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: ராஜீவ் சுக்லா

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: ராஜீவ் சுக்லா
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை)  நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை  தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “ எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்றார். 

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
2. ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது? சேவாக் கணிப்பு
ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
3. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார்: தினேஷ் கார்த்திக் தகவல்
ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.