கிரிக்கெட்

இந்தியாவில் ஐ.பி.எல். தொடரை நடத்தாதது ஏன்? - பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம் + "||" + Why not to hold IPL in India? - B.C.C.I. Secretary Jay Shah

இந்தியாவில் ஐ.பி.எல். தொடரை நடத்தாதது ஏன்? - பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

இந்தியாவில் ஐ.பி.எல். தொடரை நடத்தாதது ஏன்? - பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்
ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கமளித்துள்ளார்.
புதுடெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. 

இந்த ஆண்டுக்கான தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி உள்பட 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்த நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கமளித்துள்ளார்.

அதில், “செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்” என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
5. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,058- பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.