கிரிக்கெட்

கொரோனா அறிகுறி: கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- மனைவி தனிமைப்படுத்தி கொண்டனர் + "||" + Bhuvneshwar Kumar And His Wife in Quarantine After Displaying COVID-19 Symptoms

கொரோனா அறிகுறி: கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- மனைவி தனிமைப்படுத்தி கொண்டனர்

கொரோனா அறிகுறி:  கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- மனைவி தனிமைப்படுத்தி கொண்டனர்
கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- அவரது மனைவி தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மீரட்

கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் மீரட் நகரில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் 20 ஓவர்  அணியில் புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் புவனேஷ்வர் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியு நுபுரு   தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தம்பதியினருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படு வருகிறது  மே 21 அன்று அவரது  தாயாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்பத்தில் மற்றவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால்  காலமானார். அவருக்கு வயது 63.

புவனேஷ்வர் 2012 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 21 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 48 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் மொத்தம் 246 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூயார்க் நகரில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் கட்டாயம்
அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயார்க்கில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.
2. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
4. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.