வெளிநாட்டு வீரர்கள் விலகினாலும் ஐ.பி.எல். போட்டி நடக்கும் - இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி


வெளிநாட்டு வீரர்கள் விலகினாலும் ஐ.பி.எல். போட்டி நடக்கும் - இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி
x
தினத்தந்தி 2 Jun 2021 1:23 AM GMT (Updated: 2021-06-02T06:53:08+05:30)

வெளிநாட்டு வீரர்கள் விலகினாலும் ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்தி முடிப்பதே எங்களது முக்கிய குறிக்கோள் என இந்திய கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

துபாய்,

கொரோனா பரவலால் இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் எஞ்சிய 31 ஆட்டங்களும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. முன்னணி கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அங்கு சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். மீண்டும் ஐ.பி.எல். தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்வது குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேட்ட போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்தி முடிப்பதே எங்களது முக்கிய குறிக்கோள். எனவே இந்த போட்டியில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாட தயாராக இருந்தாலும் மகிழ்ச்சியே. அதேசமயம் யார் வராமல் போனாலும் ஐ.பி.எல். போட்டி நின்று விடாது’ என்றார்.

Next Story