‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்களாக இருக்க வேண்டும்’ -ரவிசாஸ்திரி


‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்களாக இருக்க வேண்டும்’ -ரவிசாஸ்திரி
x
தினத்தந்தி 3 Jun 2021 2:58 AM GMT (Updated: 2021-06-03T08:28:46+05:30)

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில்,

‘இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது. தற்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் 3 அல்லது 3½ மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.’ என்றார்.

Next Story