கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் மகனுக்கு இடம் + "||" + Place for son of former captain in Pakistan cricket team

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் மகனுக்கு இடம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் மகனுக்கு இடம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


இவ்விரு தொடர்களிலும் 20 ஓவர் அணியில் புதுமுக வீரராக பேட்ஸ்மேன் 22 வயதான அசாம் கான் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கானின் மகன் ஆவார். ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக இவரது சிக்சர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பே அவரை அணிக்கு இழுப்பது குறித்து தேர்வு குழு யோசித்தது. ஆனால் அந்த சமயத்தில் அவரது உடல் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாக இருந்தது. ஓரளவு மெலிந்தால் தான் அணித் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டனர். அதன் பிறகு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அவர் 30 கிலோ குறைத்து இப்போது 100 கிேலா கொண்டவராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
2. 66 வது வயதில் 38 வயது டீச்சரை 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்
66 வயதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் 38 வயது டீச்சரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
3. ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம்பிடிப்பு
பேட்ஸ்மேன்,பந்துவீச்சாளர் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
4. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: ரூ.27 லட்சம் பறிமுதல்
டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
5. கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்து முடிவு எடுத்தது எப்போது? - பிளமிங் புதிய தகவல்
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்து முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவலை தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளது.