கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட தயார் - தினேஷ் கார்த்திக் பேட்டி


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட தயார் - தினேஷ் கார்த்திக் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2021 8:39 PM GMT (Updated: 2021-06-06T02:09:14+05:30)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட தயார் என தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், ‘ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கு வரமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சொல்லி விட்டார். கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வருவாரா? என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது. ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய விஷயங்கள் மாறலாம். அணி நிர்வாகம் என்னை தலைமை தாங்கி அணியை வழிநடத்த சொன்னால், அதனை ஏற்று செயல்பட தயார்’ என்றார்.

Next Story