நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் இலக்கு


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 6 Jun 2021 8:48 PM GMT (Updated: 6 Jun 2021 8:48 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ேபாட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 378 ரன்களும், இங்கிலாந்து 275 ரன்களும் எடுத்தன. அடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 36 ரன்களும், ராஸ் டெய்லர் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தது 75 ஓவர்கள் எஞ்சி இருந்தது. சவாலான இலக்கு என்பதால் இங்கிலாந்து வீரர்கள் ‘டிரா’ செய்யும் முனைப்புடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 51 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

Next Story