கிரிக்கெட்

இந்தியா-இலங்கை தொடர்: ஒரு நாள், இருபது ஓவர் போட்டி கால அட்டவணை வெளியீடு + "||" + India and Sri Lanka series: One day, Twenty20 match schedule released

இந்தியா-இலங்கை தொடர்: ஒரு நாள், இருபது ஓவர் போட்டி கால அட்டவணை வெளியீடு

இந்தியா-இலங்கை தொடர்:  ஒரு நாள், இருபது ஓவர் போட்டி கால அட்டவணை வெளியீடு
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் சர்வதேச இருபது ஓவர் ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, 3 ஒரு நாள் போட்டிகளும் மற்றும் 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளன.  முதல் ஒரு நாள் போட்டி வருகிற ஜூலை 13ந்தேதி தொடங்கும்.  அதன்பின் 2வது போட்டி 16ந்தேதியும், 3வது போட்டி 18ந்தேதியும் நடைபெறும்.

இதன்பின்பு, முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டி தொடர், வருகிற ஜூலை 21ந்தேதி தொடங்கும்.  அடுத்த இரு போட்டிகளும் முறையே ஜூலை 23 மற்றும் ஜூலை 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் தலைமையில் அணிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகளாக அதிகரிப்பு அரசாணை வெளியீடு
அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
4. கொரோனா தடுப்பூசி: இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியீடு
கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
5. கேல் ரத்னா, துரோணாச்சார்யா விருதுகள்; ஹாக்கி இந்தியா பரிந்துரை வெளியீடு
கேல் ரத்னா, துரோணாச்சார்யா உள்ளிட்ட விருதுகளுக்கான பரிந்துரைகளை ஹாக்கி இந்தியா வெளியிட்டு உள்ளது.