கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + South Africa West Indies First Test Starting today

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் இன்று தொடங்குகிறது.
செயின்ட் லூசியா, 

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் இன்று தொடங்குகிறது. டீன் எல்கர் தலைமையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணியில் பவுமா, குயின்டான் டி காக், மார்க்ராம், வான்டெர் துஸ்சென், காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ் போன்ற அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 1991-92-ம் ஆண்டு முதல்முறையாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்டில் ஆடிய போது தென்ஆப்பிரிக்கா தோற்றது. அதன் பிறகு அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 முறை தொடரை வென்றிருக்கும் தென்ஆப்பிரிக்கா அந்த பெருமையை தக்க வைக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டிவருகிறது.

ஜாசன் ஹோல்டரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் புதிய கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடியெடுத்து வைக்கிறது. அந்த அணியில் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், ஹோல்டர், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் என்று திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் தென்ஆப்பிரிக்காவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு
'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க பெண் மந்திரி சர்ச்சை பேச்சு
2. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
3. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடர்: மைதானங்களை குறைக்க பி.சி.சி.ஐ. முடிவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
4. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து..!
ஒமைக்ரான் வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்க உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா- ஒமைக்ரான் பாதிப்பா?
கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது