கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + 2nd Test against New Zealand: England all-out for 303

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து இருந்தது. டேன் லாரன்ஸ்(67 ரன்), மார்க்வுட் (16 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில் 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. மார்க்வுட் 41 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 81 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியில், பொறுப்பு கேப்டன் டாம் லாதம் 6 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க வீரர் டிவான் கான்வே 80 ரன்கள் விளாசினார். 3-வது 
வரிசையில் இறங்கி ஸ்ேகாரை வலுப்படுத்திய வில் யங்க் (82 ரன்) கடைசி ஓவரில் வீழ்ந்தார். 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் (46 ரன்) அவுட் ஆகாமல் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது
3. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலில் பேட்டிங்
144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது.
5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.