கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி + "||" + India’s Squad For Sri Lanka To Undergo Two-Week Quarantine In Mumbai From June 14

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள், ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடை திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
 
இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த சூழலில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டனர்.   

இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

பின்பு ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இந்திய அணியினர், அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்பு பயிற்சிகளை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய அணி வீரர்கள்:-

ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (வி.கீப்பர்), சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், குர்ணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சகரியா 

இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.
2. இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்
இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3. இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி
இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.
4. 2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு
இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்துள்ளது.
5. இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்
இந்தியாவுடனான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.