கிரிக்கெட்

ஃபீல்டிங் செய்யும் போது சக வீரருடன் மோதியதில் டு பிளசிஸ் காயம்: மருத்துவமனையில் பரிசோதனை + "||" + Faf du Plessis shifted to hospital for tests after colliding with player during PSL match while fielding

ஃபீல்டிங் செய்யும் போது சக வீரருடன் மோதியதில் டு பிளசிஸ் காயம்: மருத்துவமனையில் பரிசோதனை

ஃபீல்டிங் செய்யும் போது சக வீரருடன் மோதியதில் டு பிளசிஸ் காயம்: மருத்துவமனையில் பரிசோதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக டு பிளசிஸ் விளங்கி வருகிறார்.
அபுதாபி,

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டு பிளசிஸ் விளையாடி வருகிறார்.  அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில்  குவெட்டா கிளேடியட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி ஆகிய அணிகள் மோதின.  

குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த டுபிளஸிஸ்,  டேவிட் மில்லர் அடித்த பந்தை  டு பிளசிஸ் பிடிக்க  முயன்றார். அப்போது சக வீரர் முகம்மது ஹஸ்னைனுடன் பயங்கரமாக மோதினார். 

முகம்மது ஹஸ்னைன் கால் டு பிளசிஸின் கழுத்தில் பலமாக தாக்கியது. இதில் காயம் அடைந்த டு பிளஸிஸ் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். மேலும், காயத்தின் தீவிரத்தன்மை குறித்து ஆராய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.