இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 13 Jun 2021 11:01 PM GMT (Updated: 2021-06-14T04:31:43+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பர்மிங்காம்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 303 ரன்களும், நியூசிலாந்து 388 ரன்களும் எடுத்தன. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. 3-வது நாள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் பரிதவித்தது.இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் முதல் பந்திலேயே (ஆலி ஸ்டோன் 15 ரன்னில் கேட்ச்) இழந்து 41.1 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, நீல் வாக்னெர் தலா 3 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 38 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 10.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது 22 ஆண்டுகளுக்கு பிறகு இதுேவ முதல் முறையாகும். இதற்கு முன்பு 1986, 1999-ம் ஆண்டுகளிலும் தொடரை வசப்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் 2014-ம் ஆண்டுக்கு பிறகு ெசாந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை பறிகொடுத்திருக்கிறது.

Next Story