ஐரோப்பிய கால்பந்து போட்டி: ரஷியாவை பந்தாடியது பெல்ஜியம் - டென்மார்க்குக்கு அதிர்ச்சி அளித்தது பின்லாந்து


ஐரோப்பிய கால்பந்து போட்டி: ரஷியாவை பந்தாடியது பெல்ஜியம் - டென்மார்க்குக்கு அதிர்ச்சி அளித்தது பின்லாந்து
x
தினத்தந்தி 13 Jun 2021 11:50 PM GMT (Updated: 2021-06-14T05:20:50+05:30)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை பந்தாடியது. மற்றொரு ஆட்டத்தில் பின்லாந்து அணி, டென்மார்க்கை தெறிக்க விட்டது.

செயின்ட்பீட்டர்ஸ்பர்க்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் ரஷியாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியம், ரஷியாவை எதிர்கொண்டது. எதிர்பார்த்தது போலவே பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியின் கையே ஓங்கியது. 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லியான்டர் ெடன்டோன்க்கெர் கோல் பகுதியை நோக்கி தூக்கியடித்த பந்தை அங்கு நின்ற ரஷிய வீரர் ஆந்த்ரே செம்யோனா தடுத்திருக்க வேண்டும். ஆனால் பந்தை அவர் தனவசப்படுத்த தவறியதால் அது பெல்ஜியம் வீரர் ரோம்லு லுகாகுவிடம் சென்றது. அவர் பந்தை எளிதில் கோல் வலைக்குள் அனுப்பினார்.

34-வது நிமிடத்தில் பெல்ஜியம் மாற்று ஆட்டக்காரர் தாமஸ் முனீா் கோல் அடிக்க, முதல் பாதியில் அந்த அணி 2-0 என்ற கணக்கில் வலுவாக முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ரஷியா ஓரளவு நெருக்கடி கொடுத்த போதிலும் பதில் கோல் திருப்பும் முயற்சிகளுக்கு பலன் கிட்டவில்லை.

பந்து பெரும்பாலும் (62 சதவீதம்) பெல்ஜியம் அணியினர் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தது. 88-வது நிமிடத்தில் ரோம்லு லுகாகு மேலும் ஒரு கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை திகைக்க வைத்தார். இது அவரது 62-வது சர்வதேச கோலாகும். முடிவில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை துவம்சம் ெசய்து தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.யூேரா கால்பந்து வரலாற்றில் உள்ளூரில் 3 கோல்கள் வாங்கி தோற்ற முதல் அணி என்ற மோசமான அவச்சாதனையை ரஷியா பெற்றுள்ளது. ரஷிய கேப்டன் ஆர்டெம் ஜியூபா கூறுகையில், ‘எங்களது தொடக்கம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் நாங்கள் செய்த அற்பமான தவறு எல்லாவற்றையும் மாற்றி விட்டது. இது போன்ற வலுவான அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே கோல் விட்டுக்கொடுத்துவிட்டு அதன் பிறகு மீள்வது மிகவும் கடினம்’ என்றார்.

முன்னதாக இதே பிரிவில் ேகாபன்ேஹகன் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் ெடன்மார்க் அணி, 54-ம் நிலை அணியான பின்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் டென்மார்க் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் முடியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் உறைந்து போனார்கள். மைதானத்திலேயே அவருக்கு 10 நிமிடங்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் இயல்பு நிலைக்கு திரும்பவில்ைல. இதையடுத்து உடனடியாக ஸ்டிரச்சரில் தூக்கி சென்று ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு அவர் கண்விழித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வந்த தகவலுக்கு பிறகே டென்மார்க் வீரர்களும், ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். கிறிஸ்டியன் உடல்நிலை தேறியதால் தொடர்ந்து விளையாட விரும்புவதாக இரு அணியினரும் போட்டி அமைப்பு குழுவினரிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து 1¾ மணி நேரத்திற்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது.

கிறிஸ்டியனின் உடல்நிலை பாதிப்பு களேபரத்துக்கு மத்தியில் டென்மார்க் வீரர்கள் ஆடிய போதிலும் களத்தில் முழு உத்வேகத்தை காட்ட தவறவில்லை. இவர்கள் பக்கமே பந்து அதிகமாக (64 சதவீதம்) சுழன்றது. இதே போல் பந்தை இலக்கை நோக்கி உதைப்பதிலும் டென்மார்க் வீரர்களின் ஜாலமே எதிரொலித்தது. ஆனால் அதிர்ஷ்டம் தான் கைகூடவில்லை.

ஐரோப்பிய கால்பந்து போட்டியின் அறிமுக அணியான பின்லாந்து 60-வது நிமிடத்தில் டென்மார்க்குக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர் யுரோனின் தூக்கியடித்த பந்தை சக வீரர் ஜோயல் போஜன்பாலா தலையால் முட்டி கோலாக்கினார். இந்த ஆட்டத்தில் பின்லாந்து அடித்த ஒரே ஷாட்டும் கோலாக மாறியது.

ஆனால் டென்மார்க் தரப்பில் 23 ஷாட்டுகள் அடிக்கப்பட்டும் பிரயோஜனம் இல்லை. பின்லாந்தின் தடுப்பாட்ட வீரர்களும், கோல் கீப்பர் லுகாஸ் ஹராடெக்கியும் அபாரமாக செயல்பட்டு டென்மார்க்கின் யுக்திகளை தகர்த்தனர். ஹீரோவாக ஜொலித்த ஹராடெக்கி, 74-வது நிமிடத்தில் டென்மார்க்கின் பெனால்டி வாய்ப்பை முறியடித்து பிரமிக்க வைத்தார். பெனால்டி வாய்ப்பில் ஹோஜ்ஜெர்க் உதைத்த பந்தை ஹராடெக்கி துல்லியமாக கணித்து பாய்ந்து விழுந்து அமுக்கினார்.

முடிவில் பின்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி, யூரோ கால்பந்தில் வரலாற்று சிறப்புமிக்க தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்தது. உள்ளூரில் கடந்த 12 சர்வதேச போட்டிகளில் டென்மார்க் கோல் அடிக்காதது இதுவே முதல் நிகழ்வாகும்.


Next Story