கிரிக்கெட்

"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் + "||" + Ravichandran Ashwin Kept Away From Cricket For 6 Months To Save Him From Ban: Saeed Ajmal

"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்

"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்
கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் சயீத் அஜ்மல். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன்  கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் தப்பிவிட்டார் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்.

கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் கூறியதாவது:-

கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அஸ்வின் ஏன் 6 மாதக்காலம் விளையாடாமல் இருந்தார்? அப்போது அவருக்கு உதவி அளிக்கப்பட்டது. அவருடைய பவுலிங் போடும் முறை மாற்றப்பட்டது. அதனால் ஐசிசியின் தடையில் இருந்து அவர் தப்பித்தார். ஆனால் பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களுக்கு பணம்தான் முக்கியம்.

2011 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் என்னுடைய பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபுள்யூ ஆனார். ஆனால் அம்பயர் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை. அதனால் அவர் சிறப்பாக தொடர்ந்து விளையாடினார். இப்போது கூட டிவியில் அதைப் பார்க்கும்போது மிக எளிதாக தெரியும் சச்சின் அவுட்டென்று. இது தொடர்பாக பலரும் என்னிடம் கேட்டுவிட்டனர், ஆனால் அம்பயரின் அந்த முடிவு குறித்து என்னிடம் பதில் இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
2. அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
4. போட்டியின் போது ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை
முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போதும் மைதானத்தில் யூடியூப் பிரபலம் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.
5. தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.’