கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிப்பு + "||" + World Test Championship Final - List of 15 players of the Indian team announced

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
துபாய்,

9 அணிகள் பங்கேற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த இரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்தியா, நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 20-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக வீரர்கள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவுடன் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்டது. இதில் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

நியூசிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு;-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.

இதனை தொடர்ந்து 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியலை தற்போது பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. இதில் 6 பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு;-

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சகா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது எப்படி? ஒரு அலசல்
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.