கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் - அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + Dravid to coach India for Sri Lanka series - Official announcement

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் - அதிகாரபூர்வ அறிவிப்பு

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி செல்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தும் நடைமுறைைய நேற்று முன்தினம் தொடங்கினர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கு முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனமான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் பணியாற்றுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயிற்சியாளராக இருந்த போது ஒவ்வொரு தொடரிலும் எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தேன்: டிராவிட் பேட்டி
இந்திய ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக இருக்கையில் ஒவ்வொரு தொடரிலும் அணியில் இடம் பெற்ற எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தேன் என்று டிராவிட் தெரிவித்தார்.