கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஷர்துல் தாகூருக்கு இடமில்லை + "||" + Lokesh Rahul and Shardul Tagore have been left out of India's squad for the Test series

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஷர்துல் தாகூருக்கு இடமில்லை

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஷர்துல் தாகூருக்கு இடமில்லை
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர், பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
சவுத்தம்டன்,

நியூசிலாந்துக்கு எதிராக நாளை மறுதினம் தொடங்கும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையொட்டி 20 பேர் கொண்ட இந்திய அணியினர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். ஐ.சி.சி. நடைமுறைப்படி இதில் இருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 15 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஹீரோவாக ஜொலித்த ஷர்துல் தாகூர், பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் நீக்கப்பட்டனர். மூத்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 

இ்ந்திய அணி வருமாறு:- 

விராட் கோலி (கேப்டன்), சுப்மான் கில், ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்
‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்.