கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் + "||" + World Test Championship Match Delayed due to rain

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்
இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை காரணமாக டாஸ் சுண்டப்படுவது தாமதமாகியுள்ளது.
சவுத்தம்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண்கிறது.

முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.  

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு ( இந்திய இன்று மாலை 3 மணி) தொடங்குவதாக இருந்தது. ஆனால், சவுத்தம்டனில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

இதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டிக்கான டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் (முதல் பகுதி) ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

நேரம் இழப்பு இன்றி 5 நாட்களும் போட்டி முழுமையாக நடந்து டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால் சவுத்தம்டனில் போட்டி  நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அதில் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். 

அதே சமயம் 5-வது நாளுக்குள் முடிவு கிடைத்து விட்டால், நேரம் கணக்கீடு மற்றும் கூடுதல் நாள் தேவை இருக்காது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¼ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் ரத்து
மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
2. 'வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது’ - இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்
வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதை நான் பார்க்கிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.