அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு


அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
x
தினத்தந்தி 19 Jun 2021 1:13 AM GMT (Updated: 19 Jun 2021 1:13 AM GMT)

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கெவின் ஓ பிரையன். 37 வயதான பிரையன் இதுவரை 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,618 ரன்களும், 114 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 328 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்ததில் கெவின் ஓ பிரையனின் பங்களிப்பு (63 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 113 ரன் குவிப்பு) மகத்தானது. இதில் 50 பந்துகளில் சதத்தை எட்டி, உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். அச்சாதனை இந்த நாள் வரைக்கும் தொடருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓ பிரையன் நேற்று அறிவித்தார். ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம். அயர்லாந்து அணிக்காக 153 ஒரு 
நாள் போட்டிகளில் ஆடியது மிகப்பெரிய கவுரவம். இதில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் எனது வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும். டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுேவன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

Next Story