கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் + "||" + World Test Championship: India lose 3 wickets for 146 runs

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்
போதிய வெளிச்சமின்மை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
சவுத்தம்டன்,

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது. 

தொடர் மழையால் மைதானம் ஈரப்பதம் ஆனது. இதனை ஆய்வு செய்த நடுவர்கள் ஆடுகளம் போட்டிக்கு உகந்ததாக இல்லை என்று கூறி ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்தனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். 

இந்த நிலையில், 2-வது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் போடப்பட்டது. இதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் ஜெயித்தார். டாஸ் வென்ற அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

அதன்படி, இந்திய அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோகித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் நிதானமாக ஆடத் துவங்கினர். 20.1 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 62 ஆக இருந்தபோது ரோகித் ஷர்மா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 24.3 ஓவர்களில் சுப்மன் கில்லும் 28 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் நிதானமாக ஆடத் தொடங்கினர். 40.2 ஓவரில் புஜாராவும் ஆட்டமிழக்க, ரஹானே பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

பின்னர் 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரண்டாம் நாள் முடிவுக்கு வந்தது. கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், ஜேமிசன் மற்றும் வேக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது
ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
2. இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி
இளையோர் கைப்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
3. ஒலிம்பிக் ஆக்கிப் போட்டி; இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது - டாக்டர் ராமதாஸ்
ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4. 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.
5. இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்
இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.