கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் + "||" + ICC World Test Championship Final's 5th Day Match Delayed due to Rain

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

2-வது நாளான கடந்த 19-ம் தேதி ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் (12 ரன்), ராஸ் டெய்லர் (0) அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

ஆனால், நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. ஆனால், சவுத்தாம்டனில் இன்றும் காலை முதல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இன்றைய 5-ம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இப்போட்டியில் ரிசர்வ் டே என்று கூடுதாலாக ஒருநாள் (6-வது நாள்) வழங்கப்பட்டுள்ளபோதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்து கோப்பை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
2. அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; 5-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்
மழை காரணமாக தடைபட்டிருந்த 5-ம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்
போதிய வெளிச்சமின்மை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.