கிரிக்கெட்

அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி + "||" + ICC World Test Championship Final's 5th Day Match Lunch Break

அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
சவுத்தாம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

2-வது நாளான கடந்த 19-ம் தேதி ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் (12 ரன்), ராஸ் டெய்லர் (0) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

ஆனால், நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக தொடங்கியுள்ளது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.  

டெய்லர் 37 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்து வீச்சில் சும்பான் கில்லிடம் கேட் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 23 பந்துகளில் 7 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய வாட்லிங் 3 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

தற்போது உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 19 ரன்னுடனும், டி கிராண்ட்ஹோம் ரன் எதுவும்(0) எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து உள்ளது. 

இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

போட்டி நிறைவடைய இன்னும் ஒன்றரை நாட்கள் உள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; 5-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்
மழை காரணமாக தடைபட்டிருந்த 5-ம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்
போதிய வெளிச்சமின்மை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.