கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட் + "||" + ICC World Test Championship New Zealand allout at 249 runs

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

2-வது நாளான கடந்த 19-ம் தேதி ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது. 

ஆனால், நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக தொடங்கியுள்ளது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். பொறுப்புடன் ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் 49 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி இந்தியாவை விட 32 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; 5-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்
மழை காரணமாக தடைபட்டிருந்த 5-ம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்
போதிய வெளிச்சமின்மை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.