கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 64/2 + "||" + Test Championship Final: India 64/2 in the second innings

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 64/2

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 64/2
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது

2-வது நாளான கடந்த 19-ம் தேதி ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது. 

ஆனால், நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். பொறுப்புடன் ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் 49 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி இந்தியாவை விட 32 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

இந்திய அணியில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 

அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், புஜாரா சேர்ந்தார். நிதானமாக ரன் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 30 ரன்கள் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து புஜாராவுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 

பின்னர் 5-அம் நாள் ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 30 ஒவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 8 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் சார்பில் சவுத்தி இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார். தற்போது இந்திய அணி, நியூசிலாந்து அணியை விட 32 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவரும் விளையாட வேண்டும்: கவாஸ்கர்
சவுத்தம்டனில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-