கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம் + "||" + Jamieson blows away Kohli, Pujara early

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது
சவுத்தம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி தொடங்கியது. இடையில் வருண பகவானும் விளையாடியதால் ஆட்டத்தின் 5-வது நாளில்தான் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.  முதல் இன்னிங்சில்  99.2 ஓவர்களில் 249 ரன்கள் சேர்த்து  நியூசிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.   

அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடியது. சுப்மான் கில் 8 ரன்னில் வெளியேறினார். 5-வது நாள் நிறைவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

மழை பாதிப்பு எதிரொலியாக இந்த டெஸ்டில் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6-வது நாளான இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் செஷனிலேயே இந்திய அணியில்   கேப்டன் விராட் கோலி (13 ரன்கள்), புஜாரா (15 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.  
இதனால், இரண்டு முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடிக்கு ஏற்பட்டுள்ளது.  துணை கேப்டன் ரகானேவும், ரிஷப் பண்டும் களத்தில் உள்ளனர். அடுத்த 2 மணி நேரத்திற்கு மேற்கொண்டு விக்கெட்டுகள் எதையும் பறிகொடுக்காமல் இந்தியா விளையாடுவது முக்கியம். அப்படி விளையடினால் மட்டுமே  போட்டியை இந்தியா டிரா செய்ய வாய்ப்பு கிடைக்கும். 

இந்திய அணி 40 ஓவர்கள் நிலவரப்படி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியை விட 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.
2. இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி - உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்
ஐ.ஐ.டி. உருவாக்கிய இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலிய உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.
3. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியா முதலில் பந்து வீச்சு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
5. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.