கிரிக்கெட்

இந்தியா 170- ரன்களுக்கு ஆல் அவுட்- நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 139-ரன்கள் + "||" + India packed up for 170, NZ need 139 to win

இந்தியா 170- ரன்களுக்கு ஆல் அவுட்- நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 139-ரன்கள்

இந்தியா 170- ரன்களுக்கு ஆல் அவுட்- நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 139-ரன்கள்
இன்னும் 55 ஓவர்கள் வீசப்பட வேண்டியுள்ளதால், இந்திய அணி டிரா செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
சவுத்தம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி தொடங்கியது. இடையில் வருண பகவானும் விளையாடியதால் ஆட்டத்தின் 5-வது நாளில்தான் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.  முதல் இன்னிங்சில்  99.2 ஓவர்களில் 249 ரன்கள் சேர்த்து  நியூசிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.   

அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடியது. சுப்மான் கில் 8 ரன்னில் வெளியேறினார். 5-வது நாள் நிறைவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

மழை பாதிப்பு எதிரொலியாக இந்த டெஸ்டில் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6-வது நாளான இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் செஷனிலேயே இந்திய அணியில்   கேப்டன் விராட் கோலி (13 ரன்கள்), புஜாரா (15 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சிறிது நம்பிக்கை அளித்த ரிஷப் பண்டும் 41 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். 

73 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 138- ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 55 ஓவர்கள் வீசப்பட வேண்டியுள்ளதால்,  இந்திய அணி டிரா செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை - அமெரிக்க தூதரகம் வெளியிட்டது
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. இந்தியாவில் பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து திறப்பது சரியாக இருக்கும் - ஐசிஎம்ஆர் தலைவர் பேட்டி
இந்தியாவில் பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து திறப்பது சரியாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் கூறினார்.
5. இந்தியாவில் இதுவரை 44.91 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்
இந்தியாவில் இதுவரை 44.91 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.