கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் வாங்கியது + "||" + IPL Cricket: The US company has bought the shares of the Rajasthan Royals team

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் வாங்கியது

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் வாங்கியது
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் வாங்கியது.
புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியில் (2008-ம் ஆண்டு) கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட எமெர்ஜிங் மீடியா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்சின் 15 சதவீத பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ரெட் பேர்டு கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் லிவர்பூல் கால்பந்து கிளப் (இங்கிலாந்து) உள்பட பல்வேறு விளையாட்டு கிளப்களில் முதலீடு செய்து இருக்கிறது. ரெட் பேர்டு நிறுவனம் வாங்கிய பங்குகளின் மொத்த மதிப்பீட்டு தொகை எவ்வளவு என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேநேரத்தில் எமெர்ஜிங் மீடியா நிறுவனமும் தனது பங்கினை 51 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.