டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:44 PM GMT (Updated: 2021-06-26T05:14:10+05:30)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.


இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை  கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர்  17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14- ஆம் தேதி  முடிவடையுள்ளது. 

போட்டித்தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே,  கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

எனினும், ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் எனவும், அப்போது இந்தியாவில் பருவமழை சீசன் என்பதால் இதன் காரணமாக போட்டித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ  தெரிவித்து உள்ளது. 


Next Story