கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி அமீரகத்தில் தொடக்கம்? + "||" + The 20-over World Cup cricket tournament starts in the United States on October 17?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி அமீரகத்தில் தொடக்கம்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி அமீரகத்தில் தொடக்கம்?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி அமீரகத்தில் தொடங்க ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி, 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடங்கி விட்டது.

தள்ளிவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை அமீரகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.