கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி + "||" + England complete 3-0 sweep with emphatic win

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி
இலங்கைகு எதிரான தொடரையும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வென்றது.
சவுத்தாம்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.  இதில் முதல் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்,  கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது. 

சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டேவிட் மலான் அதிரடியில் இலங்கை கதி கலங்கியது.    48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த டேவிட் மலான் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.  இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கைகு எதிரான தொடரையும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வென்றது. டேவிட் மலான் ஆட்ட நாயகன் விருதையும், சாம் கரன்  தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
2. கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை - இங்கிலாந்து
கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
3. இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
4. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.
5. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.