தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
x
தினத்தந்தி 26 Jun 2021 10:28 PM GMT (Updated: 2021-06-27T03:58:59+05:30)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியுள்ளது. 

இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160- ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Next Story